இந்த இணையதளத்திற்கு வருகை தரும் உங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ

Friday 13 July 2012

நோன்பின் சட்டங்கள்



பிறையை கண்களால் பார்த்துதான் ரமலானை ஆரம்பிக்க வேண்டும்
அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: புகாரி 1909
''பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)  நூல்: புகாரி 1906

ரமலான் மாதத்தின் சிறப்புகள்
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.
(அல்குர்ஆன் 2:185)
ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலிநூல்: புகாரி 1899
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள்  திறக்கப்படுகின்றனநரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றனஷைத்தான்கள் சங்கிரியால் விலங்கிடப்படுகின்றனர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  நூல் : முஸ்லீம் (1957)
''ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலிநூல்: புகாரீ (1782) முஸ்­லிம் (2408)


இறைத்தூதரின் எச்சரிக்கை
நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் ஏறி, ''ஆமீன்ஆமீன்,ஆமீன்'' என்று கூறினார்கள்.  அப்போது, ''அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மிம்பரில் ஏறும் போது,ஆமீன்ஆமீன்ஆமீன் என்று கூறினீர்களே!'' என்று கேட்கப்பட்டது.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:  ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து, ''எவர் ரமலான் மாதத்தை அடைந்து அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படாமல் நரகம் புகுவாரோ அவரை அல்லாஹ் (தன் அருளிலிருந்து) தூரமாக்கட்டும்'' என்று கூறி, ''ஆமீன் என்று சொல்லுங்கள்'' என்றார்கள். நான் ஆமீன் என்றேன்.  ''எவருக்குப் பெற்றோர் இருவருமோ அல்லது ஒருவரோ இருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்யாமல் இறந்து நரகம் செல்வாரோ அவரை அல்லாஹ் (தன் அருளிலிருந்து) தூரமாக்கட்டும்'' என்று கூறி, ''ஆமீன் என்று சொல்லுங்கள்'' என்றார்கள்.  நான் ஆமீன் என்றேன். ''எவரிடம் உங்களைப் பற்றி கூறப்பட்டுஉங்கள் மீது ஸலவாத் கூறவில்லையோ அவரை அல்லாஹ் (தன் அருளிலிருந்து) தூரமாக்கட்டும்'' என்று கூறி, ''ஆமீன் என்று சொல்லுங்கள்'' என்றார்கள்.  நான் ஆமீன் என்றேன்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),  நூற்கள் : இப்னு ஹிப்பான்மவாரிதுல்லம்ஆன்முஸ்னத் அபீயஃலா,முஸ்னத் பஸ்ஸார்தப்ரானீ கபீர்
இந்த ஹதீஸ் தரும் எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு நம்மை நாமே இந்த ரமளான் மாதத்தில் திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் அல்லாஹ்வின் சாபத்தை எதிர் கொள்ள வேண்டும்.


நோன்பு கட்டாயக் கடமை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல்,தொழுகையை நிலை நிறுத்துதல்ஸகாத் வழங்குதல்,ஹஜ் செய்தல்ரமளானில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலிநூல்: புகாரி 8


நோன்பின் சிறப்புகள்
யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலிநூல்: புகாரீ (1901),முஸ்லிம் (1393)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:''நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும். நோன்பு எனக்கு உரியது. அதற்கு நானே கூ­ கொடுப்பேன்'' என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு (பாவங்களி­ருந்து காக்கும்) கேடயமாகும். எனவேஉங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்  கூச்ச­ட்டு சச்சரவு செய்ய வேண்டாம். யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் நான் நோன்பாளி என்று அவர் சொல்லட்டும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீதாணையாக! நோன்பாளியின் வாயி­ருந்து வீசும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு திறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகிறான். தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: புகாரி 1904
''ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநுôறு மடங்கு வரை கூ­ வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூ­வழங்குவேன்'' என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி)  நுôல்:  முஸ்லிம் (2119)
 ''சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்.'நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும்  அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்''என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலிநூல்: புகாரீ (1896),முஸ்லிம் (2121)
''நோன்பு நரகத்தி­ருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்துôரியை விடச் சிறந்ததாகும்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி புகாரீ (1894)
''நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலிநூல்: புகாரீ (1904)
ஒருவர் ஐந்து நேரத் தொழுகைகள்ஒரு ஜும்ஆவி­ருந்து மறு ஜும்ஆ (தொழுது)ஒரு ரமளானி­ருந்து மறு ரமளான் (வரை நோன்பு நோற்று)பெரும் பாவங்களை விட்டும் விலகியிருந்தார் எனில் அவற்றுக்கிடையில் ஏற்பட்ட  பாவங்களுக்கு அவை பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 344


நோன்பின் நோக்கம்
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப் பட்டது போல் உங்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது
(அல் குர்ஆன் 2:183)
நிய்யத்
எல்லா வணக்கங்களும் நிய்யத்தைப் பொறுத்தே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(நூல்: புகாரீ)
நிய்யத் என்ற வார்த்தைக்கு மனதால் எண்ணுதல் தீர்மானம் செய்தல் என்பது பொருளாகும். வாயால் மொழிவது என்ற அர்த்தம் இந்த வார்த்தைக்கு இல்லை.
நவைத்து ஸவ்மகதின் அன்அதாயி ஃபர்ழி ரமளான ஹாதிஸிஸ்ஸனதி ­ல்லாஹித் தஆலா என்று வாயால் சொல்­வைக்கப்படும் இந்த நிய்யத் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தது கிடையாது . எனவே இது போன்ற வாசகங்களைக் கூறுவது தவிர்க்கப்பட வேண்டும். அதே சமயம் சுப்ஹ் நேரத்திற்கு முன்பே நோன்பு நோற்பதாகத் நம் மனதில் தீர்மானிப்பது அவசியம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் ஃபஜ்ர் தொழுகைக்கு முன்பாகவே நோன்பு நோற்க வேண்டும் என்று தீரமானிக்க வில்லை அவருக்கு நோன்பு கிடையாது .
அறிவிப்பவர் : ஹப்ஸா (ரலிநூல் : நஸாயீ


ஸஹர் பாங்கு
பிலால் (ரலிஅவர்கள் (ஃபஜ்ருக்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''இப்னு உம்மி மக்தூம் (ரலிபாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள். பருகுங்கள். ஏனெனில் அவர் தாம் ஃபஜ்ரு நேரம் வந்ததும் பாங்கு சொல்கின்றார்'' என்று கூறினார்கள்.
அறிவிப்போர்: ஆயிஷா (ரலிஇப்னு உமர் (ரலிநூல்: புகாரி 1918, 1919
இந்த ஹதீஸி­ருந்து ஸஹரின் கடைசிப் பகுதியில் ஸஹர் பாங்கும்ஸஹர் முடிவை அறிவிப்பதற்கு சுப்ஹ் பாங்கும் சொல்லப்பட்டிருப்பதை அறியலாம்.
இன்று ஜும்ஆவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தராத வகையில் இரண்டு பாங்குகள் சொல்லப்பட்டு வருகின்றன. ஆனால் ரமளான் மாதத்தில் ஸஹர் நேரத்தில் சொல்லப்பட்ட இரண்டு பாங்குகளை இன்று நம்மில் யாரும் நடைமுறைப் படுத்துவதில்லை. இந்த நபிவழியை நமது ஜமாஅத்தினர் அனைவரும் நடைமுறைப் படுத்த முன்வர வேண்டும்.
ஸஹர் உணவைச் சாப்பிடுதல்
வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறி­ருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்!
(அல்குர்ஆன்2:187)
சுப்ஹ் நேரம் வரும் வரை சாப்பிடலாம் என்பதை இந்த வசனம் கூறுகின்றது. இதற்கு விளக்கமாக வரும் ஹதீஸ்களும் சுப்ஹ் நேரம் வரை ஸஹர் உணவு உண்ணலாம் என்பதை வ­யுறுத்துகின்றன.
பிலால் (ரலிஅவர்கள் (ஃபஜ்ருக்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''இப்னு உம்மி மக்தூம் (ரலிபாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள். பருகுங்கள். ஏனெனில் அவர் தாம் ஃபஜ்ரு நேரம் வந்ததும் பாங்கு சொல்கின்றார்'' என்று கூறினார்கள்.
அறிவிப்போர்: ஆயிஷா (ரலிஇப்னு உமர் (ரலிநூல்: புகாரி 1918, 1919
ஸுப்ஹ் தொழுகைக்கு பாங்கும் சொல்லும் வரை நாம் உண்ணலாம் பருகலாம். நோன்பு கால அட்டவணை என்று அச்சிட்டு வெளியிடக் கூடியவர்கள் ஸுப்ஹ் பாங்கிற்கு 10நிமிடம் முன்பாகவே ஸஹர் நேரம் முடிந்து விடுவதாகப் போட்டுள்ளனர். இது முழுக்க முழுக்க நபிவழிக்கு மாற்றமானதாகும். எனவே சகோதரர்கள் இந்த நோன்பு கால அட்டவணைகளை கவனத்தில் கொள்ள வேண்டாம்.

ஸஹர் உணவைத் தாமதப் படுத்துதல்
சிலர் இரவு இரண்டு மணிக்கே எழுந்து ஸஹர் உணவை முடித்து விட்டு உறங்கி விடுகின்றனர். இதுவும் நபிவழிக்கு மாற்றமான செயலாகும்.
ஸஹர் நேரத்தைத் தாமதப்படுத்திநோன்பு துறப்பதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் நீடித்துள்ளனர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலிநூல்: அஹ்மத்
மேற்கண்ட ஹதீஸ் ஸஹரைத் தாமதப்படுத்த வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தும் மூன்று மணிக்குள்ளாக ஸஹரை முடித்து விடும் வழக்கம் பெரும்பாலான மக்களிடம் உள்ளது. இது நபிவழிக்கு மாற்றமான செயல் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.


விடி ஸஹர்
தமிழகத்தின் சில பகுதிகளில் விடி ஸஹர் என்ற வழக்கம் உள்ளது. உறக்கம் மே­ட்டதால் சில நேரங்களில் ஸஹர் நேரம் முடிந்த பிறகு தான் சிலர் விழிப்பார்கள். ஸஹர் செய்வதற்கான நேரம் முடிந்து விட்டது என்பது நன்றாக தெரிந்திருந்தும் அவசரமாக ஒரு குவளைத் தண்ணீர் குடித்து விட்டு (இதைத் தான் விடி ஸஹர் என்கின்றனர்) நோன்பு நோற்பதற்காக நிய்யத் செய்து கொள்கின்றனர்.
சுபுஹ் நேரம் வந்து விட்டால் எதையும் உண்ணவோ பருகவோ கூடாது என்று கட்டளை உள்ளது. எந்த நேரத்தில் சாப்பிடவோ பருகவோ கூடாதோ அந்த நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் ஒரு நோன்பைப் பாழ்படுத்திக் கொள்கின்றனர்.

நோன்பு திறக்கும் போது ஓதும் துஆ
நோன்பு துறக்கும் போதுஅல்லாஹும்ம லக்க ஸம்து... என்ற துஆவை பரவலாக ஓதி வருகின்றார்கள். இது ஆதாரப்பூர்வமானது அல்ல. மேலும் இந்த துஆவைச் சொல்லி விட்டால் நோன்பு முறிந்து விடும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இதற்கெல்லாம் நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. அது போல் தஹபள்ளமவு வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷாஅல்லாஹ் என்று வரக்கூடிய துஆவும் ஆதாரப்பூர்வமானதல்ல. எனவே நோன்பு திறக்கும் போது பிஸ்மில்லாஹ் என்று கூறியே நோன்பு திறக்க வேண்டும்.


உணவு சாப்பிட்டு முடித்ததும் ஓதும் துஆ
பொதுவாக உணவருந்திய பின் ஓதும் துஆவை நபியவர்கள் நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள். அதனை நோன்பு திறந்த பிறகும் ஓதிக் கொள்ளலாம்.
الْحَمْدُ لِلَّهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ غَيْرَ مَكْفِيٍّ وَلَا مُوَدَّعٍ وَلَا مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا
''அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹிஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா''
பொருள்: அதிகமானதூய்மையானவளமிக்க எல்லாப் புகழும் (நன்றியும்) அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! இப்புகழ் முற்றுப் பெறாததுகைவிடப்படக் கூடாதது;தவிர்க்க முடியாதது ஆகும் 
(புகாரி : 5458)
நோன்பு திறப்பதை விரைவு படுத்துதல்
சூரியன் மறைந்து இந்தத் திசையி­ருந்து இரவு முன்னோக்கி வந்துஅந்தத் திசையி­ருந்து பகல் பின்னோக்கிப் போனால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி) நூல்: புகாரி 1954
நோன்பு திறப்பதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி) நூல்: புகாரி1957
சூரியன் மறைந்தவுடன் நோன்பை நிறைவு செய்ய வேண்டும் என்பதைக் கூறும் ஹதீஸ்கள் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. ஆனால் இன்று நடைமுறையில் பேணுதல் என்ற பெயரில் சூரிய மறைவு நேரத்தி­ருந்து 5  அல்லது பத்து நிமிடங்கள் வரை தாமதமாக நோன்பு துறக்கின்றனர். தற்போது வெளியிடப்படும் ஆயிரக்கணக்கான நோன்பு அட்டைகள்பள்ளிவாசல்களில் குறிக்கப்படும் நோன்பு துறக்கும் நேரம் அனைத்தும் நபிவழிக்கு மாற்றமானவையே என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நோன்பு துறக்க ஏற்ற உணவு
யாருக்கு பேரீச்சம் பழம் கிடைக்கிறதோ அவர் அதன் மூலம் நோன்பு துறக்கட்டும்! கிடைக்காதவர்கள் தண்ணீர் மூலம் நோன்பு துறக்கட்டும். ஏனெனில் அது தூய்மையானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி) நூல்: திர்மிதீ (631), அபூதாவூத் (2008)
இவை இல்லாவிட்டால் நம்மிடம் எந்த உணவு உள்ளதோ அதன் மூலம் நோன்பு துறக்கலாம் சிலர் உப்பைக் கொண்டு நோன்பு திறக்கின்றனர். இது நபியவர்கள் காட்டித் தராத மூடநம்பிக்கையாகும்.

நோன்பு திறப்பதற்கு உணவளித்தல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் ஒரு நோன்பாளியை (உணவளித்து) நோன்பு திறக்கச் செய்கிறாரோ அவருக்கு நோன்பாளியின் நன்மையைப் போன்று கிடைக்கிறது. ஆனாலும் நோன்பாளியின் நன்மையில் எதுவும் குறைந்து விடாது
அறிவிப்பவர் : ஸைத் பின் ஹா­த் (ரலி)  நூல் : திர்மிதி (735)


உணவளித்தவருக்காக ஓதும் துஆ
اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِيمَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ
அல்லாஹும்ம பாரிக் லஹும் ஃபீமா ரஸக்தஹும் வஃபிர்லஹும் வர்ஹம்ஹும்.
பொருள் : இறைவா நீ இவர்களுக்கு ரிஸ்க்காஹ வழங்கியவற்றில் அவர்களுக்கு பரக்கத் செய்வாயாக. அவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்குவாயாக. அவர்களுக்கு அருள்புரிவாயாக.
(திர்மிதி 3500)
اللَّهُمَّ أَطْعِمْ مَنْ أَطْعَمَنِي وَأَسْقِ مَنْ أَسْقَانِي
அல்லாஹும்ம அத்இம் மன் அத்அமனீ வஅஸ்கி மன் அஸ்கானீ
''இறைவா! எனக்கு உண்ண உணவளித்தவருக்கு நீ உணவளிப்பாயாக! எனக்குப் பருகப் பானம் புகட்டியவருக்கு நீ புகட்டுவாயாக!''
(முஸ்லிம் 4177)


நோன்பை முறிக்கும் செயல்கள்
சுபுஹ் முதல் மஃரிப் வரை உண்ணாமல் இருப்பதுபருகாமல் இருப்பதுஇல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது ஆகிய கட்டுப்பாடுதான் நோன்பு எனப்படுகிறது.
நோன்பாளிக்கு இந்த மூன்றைத் தவிர வேறு எதையும் செய்யக் கூடாது என்று தடை இல்லை. இம்மூன்று காரியங்களில் எதைச் செய்தாலும் நோன்பு முறிந்துவிடும். அது போன்று புகை பிடித்தல் மார்க்கத்தின் அடிப்படையில் அறவே ஹராமானதாகும். எனவே நோன்பு வைத்துக் கொண்டு புகைபிடித்தால் நோன்பு முறியுமாஎன்ற கேள்வியும் தவறானதாகும். பின்வரும் ஹதீஸி­ருந்து இதனை விளங்கிக் கொள்ளலாம்.
பொய்யான பேச்சையும்பொய்யான (தீய) நடவடிக்கையையும் யார் கைவிடவில்லையோ அவர் பசித்திருப்பதும் தாகமாக இருப்பதும் அல்லாஹ்வுக்குத் தேவையில்லாத ஒன்று என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: புகாரீ (1903)
நோன்பு நோற்றுக் கொண்டு சினிமாக் கொட்டகைகளில் தவம் கிடப்பதுநோன்பு நோற்றுக் கொண்டு கலப்படம்,மோசடி போன்ற செயல்களில் ஈடுபடுவதுபொய்புறம் பேசுவது ஆகியவற்றில் சர்வ சாதாரணமாக முஸ்­ம்கள் ஈடுபடுகின்றனர். பசியோடு இருப்பது மட்டும் தான் இறைவனுக்குத் தேவை என்று எண்ணுகின்றனர். இந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
நோன்பு நோற்றிருக்கும் போது உங்களிடம் ஒருவர் சண்டைக்கு வந்தால் லி அறியாமையாக நடந்து கொண்டால்ஏசினால்நான் நோன்பாளி எனக் கூறிவிடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
                             அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரீ (1894)
பொதுவாக நம்முடன் சண்டையிடுபவரோடு சண்டையிட அனுமதியிருந்தும் அதைக்கூட தவிர்த்து விட வேண்டும் என்றால் நோன்பில் எவ்வளவு பக்குவமாக இருக்க வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.  சாதாரண நாட்களில் தொலைக்காட்சி பெட்டியின் முன்னால் கிடந்து ஹராமான காட்சிகளைப் பார்ப்பவர்கள் நோன்பு நோற்ற நிலையிலாவது அதி­ருந்து விடுபட வேண்டும். நமது நோன்பைப் பாழாக்கி விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.


நோன்பை முறித்ததற்குரிய பரிகாரம்
நோன்பு நோற்றவர் நோன்பு வைத்திருந்த நினைவு இருக்கும் போது நோன்பை விடுவதற்குரிய காரணங்கள் ஏதுமின்றி நோன்பை முறித்தால் அது பெருங்குற்றமாகும். நோன்பு நோற்காதவர்களை விட நோன்பை வேண்டுமென்று முறிப்பவர்கள் கடும் குற்றவாளிகளாவர்.
இவ்வாறு நோன்பை முறித்தவர் ஒரு நோன்பை முறித்ததற்காக ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அதற்குரிய வசதியைப் பெறாதவர்கள் ஒரு நோன்பை முறித்ததற்காக இரண்டு மாதங்கள்  நோன்பு நோற்க வேண்டும். அதையும் விடாமல் தொடராக நோற்க வேண்டும். அந்த அளவுக்கு உட­ல் வலு இல்லாதவர்கள் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.
இம்மூன்று பரிகாரங்களில் எதையுமே செய்ய இயலாதவர்கள் எந்தப் பரிகாரமும் செய்ய வேண்டியதில்லை என்றாலும் செய்த குற்றத்திற்காக அழுது மன்னிப்புக் கேட்க வேண்டும்.       இதனை புகாரி 1936 ஹதீஸி­ருந்து விளங்கிக் கொள்ளலாம்
நோன்பை முறிக்கும் செயல்களை மறதியாகச் செய்தல்
''ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது மறதியாகச் சாப்பிட்டாலோ பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் அளித்துள்ளான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலிநூற்கள்: புகாரீ (1933),


குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்பது
ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹு நேரத்தை அடைவார்கள். (அந்த நிலையில் ) நோன்பும் நோற்பார்கள்.
     அறிவிப்பவர்: ஆயிஷா (ரலிஉம்மு ஸலமா (ரலி)நூற்கள்: புகாரீ (1926),
தொழுகையை நிறைவேற்றத் தான் குளிப்பது அவசியமே தவிர நோன்புக்காக குளிக்க வேண்டியதில்லை. குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்று விட்டு சுப்ஹு தொழுகைக்காக குளிக்கலாம்.


நோன்பை முறிக்காத நடைமுறைக் காரியங்கள்
நோன்பு நோற்றவர் குளிப்பதுகுழந்தைகளை முத்தமிடுதல்,இரத்தக் காயங்கள் ஏற்படுதல்,  எச்சிலை (சளியை) விழுங்குதல்,  முடி வெட்டுதல்,  வாசனை சோப்பு போடுதல்,நறுமணம் பூசுதல்,  வாந்தி எடுத்தல்நோன்பு நேரத்தில் தானாக தூக்கத்தில் ஸ்க­தம் ஏற்படுதல்உணவை நாவால் ருசி பார்த்து உமிழ்தல்,  பற்பசை அல்லது பல்பொடியைக் கொண்டு பல் துலக்குதல்,  மருத்துவத்திற்காக ரத்தம் வழங்குதல்ஆற்றில் முங்கிக் குளித்தல்காதுமூக்கு வழியாக தண்ணீர் உள்ளே செல்லுதல்நோய் நிவாரணத்திற்காக ஊசி போட்டுக் கொள்ளுதல், . கண்காது போன்றவற்றுக்கு மருந்து போடுதல்தலைவலி தைலம் பஸ்ன்படுத்துதல்,குழந்தைக்கு பாலூட்டுதல் போன்ற செயல்களால் நோன்பு முறியாது.
உட­ற்கு தெம்பைத் தரக்கூடிய சத்து ஊசிகள்குளுக்கோஸ் போன்றவை ஏற்றினால் நோன்பு முறிந்து விடும்.


பயணத்தில் நோன்பு
ஹம்ஸா பின் அம்ரு (ரலிநபி (ஸல்) அவர்களிடம், ''பயணத்தில் நான் நோன்பு நோற்கலாமா?'' என்று கேட்டார். அவர் அதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், ''நீ விரும்பினால் நோன்பு நோற்றுக் கொள். நீ விரும்பினால் விட்டு விடு'' என்றார்கள்.
   அறிவிப்பவர்: ஆயிஷா (ரலிநூல்: புகாரி 1943
நோன்பு நோற்பதிலிருந்து சலுகை பெற்றவர்கள்
தள்ளாத வயதினர்நோயாளிகள்பயணிகள்மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள்கர்ப்பிணிப் பெண்கள்பாலூட்டும் தாய்மார்கள்போன்றவர்களுக்கு நோன்பு நோற்பதிலிருந்து சலுகை வழங்கப்பட்டுள்ளது.
நோயாளிகளில் இரண்டு வகையினர் உள்ளனர். கேன்சர்,அல்சர் போன்ற தீராத நோய் உடையவர்களும் இருப்பார்கள். நிவாரணம் பெறக் கூடிய நோய்களுக்கு ஆளானவர்களும் இருப்பார்கள்.
தீரக் கூடிய நோய்களுக்கு ஆளானவர்கள் நோன்பை விட்டு விட்டுநோய் தீர்ந்தவுடன் வேறு நாட்களில் அந்த நோன்புகளை நோற்று விட வேண்டும்.
இது போன்று பயணிகள்மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள்,பாலூட்டும் தாய்மார்கள்போன்றவர்களும் நோன்பை வேறு நாட்களில் நோற்றுக் கொள்ளலாம். விடுபட்ட நோன்புகளை அடுத்த வருட இரமலானிற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று எல்லை எதையும் நபியவர்கள் வரையறுக்கவில்லை. எனவே அடுத்தடுத்த வருடங்களிலும் நோற்றுக் கொள்ளலாம்.
ஆனால் எப்போதும் அறவே நோன்பு நோற்க முடியாதவர்களான தள்ளாத வயதினர்நிரந்தர நோயாளிகள் போன்றவர்கள் ஒரு நோன்பிற்கு பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
நோன்பு நோற்கச் சக்தியற்ற கிழவர்கள்மற்றும் கிழவிகள் ஒரு நாள் நோன்புக்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்''
 (புகாரி 4505)
நமது நாட்டைப் பொறுத்த வரை ஒரு நாள் உணவு என்பது மூன்று வேளையாகும். எனவே ஒரு நோன்பை விட்டதற்காக மூன்று வேளையும் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். இதுவே பேணுதலான வழிமுறையாகும்.

நோன்பின் சட்டங்கள்


Saturday 7 July 2012

கந்தூரியில் கடை போடலாமா?


கேள்வி : திருவிழாக்களில் கூடி இருக்கும் கடைகளுக்கு நம் முஸ்லீம் மக்களும் பொருட்கள் வாங்குவதற்காக சென்று வரலாம் , இதற்கு மார்க்கத்தில் தடையில்லை என்று ஒருவர் கூறுகிறார். இது சரியா? கிள்ளை யூசுப்

பதில்  : எந்தத் தீய காரியத்திற்காகவும் ஒரு முஸ்லிம் துணை போகக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது.
'நீங்கள் நல்ல காரியங்களுக்கும், இறையச்சத்திலும்,ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! தீய காரியத்திலும் வரம்பு மீறலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளக் கூடாது (அல்குர்ஆன் 5:2)

தீமையான காரியங்களுக்கு உதவக் கூடாது என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் தீமையான காரியங்களுக்கு உதவுவது என்பதைப் புரிந்து கொள்வதில் தான் கருத்து வேறுபாடு உள்ளது.

தீமைக்குத் துணை போகக் கூடாது என்று கூறும் மேற்கண்ட வசனத்தில் நன்மைக்கு உதவுமாறும் கூறப்படுகிறது. நன்மைக்கு உதவுதல் என்பதை எவ்வாறு புரிந்துகொள்கிறோமோ அவ்வாறு தான் தீமைக்குத் துணை செய்தல் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் ஒரு தவ்ஹீத் மாநாடு நடத்துகிறோம். இந்த தவ்ஹீத் மாநாட்டில் ஒருவர் சாப்பாடு கடை போடுவதற்காக நம்மை அணுகுகிறார். நாம் அவருக்கு அனுமதி வழங்குகிறோம். இப்போது அவர் தவ்ஹீது மாநாட்டிற்கு உதவி செய்தார் என்று யாரும் கருத மாட்டோம். அவர் தன்னுடைய வருமானத்திற்காக,இலாபத்திற்காக கடைபோட்டார் என்றே கருதுவோம்.

அதே நேரத்தில் தவ்ஹீத் மாநாட்டிற்கு வருபவர்களுக்காக ஒருவர் இலவசமாக உணவுப் பொருட்களை வழங்கினால் அதை நாம் உதவியாகக் கருதுவோம்.

தவ்ஹீது மாநாட்டில் தன்னுடைய இலாபத்திற்காக கடைபோடும் ஒருவர் எப்படி தவ்ஹீது கொள்கைக்கு உதவியவராக மாட்டாரோ அது போன்றுதான் தீமையான காரியங்கள் நடக்கும் இடத்தில் ஒருவர் ஹலாலான முறையில் வியாபாரம் செய்தால் அல்லது அங்கு போடப்படும் கடைகளில் ஒரு பொருளை வாங்கினால்  அவர் அந்தத் தீமையை ஆதரித்தவர் ஆகமாட்டார்.

நன்மைக்கு உதவுதல் என்பதை நாம் எப்படி விளங்கிக் கொள்கிறோமோ அது போன்றுதான் தீமைக்கு உதவுதல் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள  வேண்டும்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடை காலகட்டத்தில் மக்காவில் உகாள், துல்மஜாஸ் போன்ற சந்தைகள் குறிப்பிட்ட நாட்களில் திறக்கப்படும் . இவை சந்தைகளாக மட்டும் இருக்கவில்லை. இங்கு சிலை வணக்கம் உட்பட கூத்து கும்மாளங்கள் அனைத்தும் நடைபெறும் இடமாகவும் இருந்தது.

இந்த சந்தைகளில் முஸ்லிம்களான ஸஹாபாக்கள் வியாபாரம் செய்வதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தத் தடையும் விதிக்கவில்லை.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : துல்மஜாஸ், உக்காழ் ஆகியவை அறியாமைக்கால வியாபாரத் தலங்களாகும். இஸ்லாம் தோன்றியதும் மக்கள் அவ்வியாபாரத்தலங்களை வெறுக்கலானார்கள். அப்போது (ஹஜ்ஜின்போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல் (அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது என்ற 2:198ஆவது வசனம் அருளப்பெற்றது. இது ஹஜ்ஜுக் காலங்களில் வியாபாரம் செய்வதைக் குறிக்கின்றது.புகாரி (1770)

பலவிதமான பாவகாரியங்கள் நடைபெற்ற உகாள், தில்மஜாஸ் போன்ற வியாபாரத் தலங்களில் இஸ்லாம் அனுமதித்தது என்பதை மேற்கண்ட செய்தியிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

தீமைகள் நடக்கும் இடங்களில் நாம் ஹலாலான முறையில் வியாபாரம் செய்தாலோ அல்லது அது போன்ற இடங்களுக்குச் சென்று ஒரு பொருளை வாங்கினாலோ அது தீமைக்கு துணை செய்ததாக ஆகாது என்பதை நாம் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

அதே நேரத்தில் ஒருவர் தீமையான காரியங்கள் நடக்கும் இடத்தில் வியாபாரம் செய்வது தவறில்லை என்றாலும் அது போன்ற தீமைகளில் தான் வீழ்ந்து விடாமல் தன்னை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். அனுமதிக்கப்பட்டது என்றால் கட்டாயம் செய்துதான் ஆக வேண்டும் என்பது கிடையாது.

நம்முடைய ஈமானிற்கு பாதிப்பு ஏற்படும் என்றால் அது போன்ற நிலைகளில் நாம் அவற்றை விட்டும் விலகிக் கொள்வதே சிறந்ததாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுமதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் அதிகம் பேர் அறிய  மாட்டார்கள். எனவே எவர் சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக்கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார்;மானத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார். எவர் சந்தேகத்திற்கிடமானவைகளில் தலையிடுகிறாரோ அவர், (அனுமதிக்கப்படாதவைகளில் தலையிடுகிறார்.) வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கின்றது அல்லாஹ்வின் நாட்டில் அவனது எல்லை (வேலி) அவனால் தடை விதிக்கப்பட்டவையே. அறிக: உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்துவிடும். அறிந்துகொள்ளுங்கள்: அது தான்  உள்ளம்.அறிவிப்பவர் :  நுஅமான் பின் பஷீர் (ரலி) நூல் : புகாரி (52)

நம்முடைய கால் நடை பிறருடைய வேலிக்குள் சென்று மேய்வது ஹராமானாதாகும். அதே நேரத்தில் வேலிக்கு அருகில் மேய்ந்தால் அது ஹராமானது கிடையாது.

வேலிக்குள் செல்லாமல் அருகில்தான் மேயும் என்று நாம் பாராமுகமாக இருந்தால் கால் நடை வேலியை தாண்டியும் சென்று விடும்.

அது போன்றுதான் தர்ஹா வழிபாடு  போன்ற பாவமான காரியங்கள் நடக்கும் இடங்களில் நாம் எந்தத் தவறிலும் பங்கேற்காமல் வியாபாரம் செய்தால் அல்லது அங்குள்ள கடைகளில் ஒரு பொருள் வாங்கினால் அது தவறு கிடையாது. ஆனால் இது வேலிக்கு அருகில் மேய்கின்ற கால்நடையின் நிலையைப் போன்றதுதான்.

நாம் வேலிக்குள் நுழையவே முடியாத இடத்தில் நம்முடைய கால்நடையை மேயவிட்டால் அது நுழைந்துவிடும் என்பதைப் பற்றி எந்தக் கவலைப்படவேண்டிய அவசியமில்லை.

அது போன்று பாவமான காரியங்கள் நடக்கும் இடங்களை விட்டும் நாம் தவிர்ந்து கொண்டால் நம்முடைய ஈமானிற்க்கு பாதிப்பு ஏற்படுவதை விட்டும் நம்மை நாம் தற்காத்துக் கொள்ளலாம்.

பெற்றோர் நலம் பேணல்


Monday 2 July 2012

சிறிய செயல் பெரிய பலன்


இறை நினைவுக்கு சொற்கத்தில் மரம்
பயிரை நட்டிக் கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்களை கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள், அபூஹுரைராவே! என்ன ஊன்றுகிறீர்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், நான் எனக்காக ஒரு கன்றை ஊன்றுகிறேன் என்றார்கள். இதனை விட உமக்குச் சிறந்த பயிரை உமக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று கேட்க, அறிவியுங்கள்! அல்லாஹ்வின் தூதரே! என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் என்று கூறுவீராக! இவை ஒவ்வொன்றிற்கும் சொர்க்கத்தில் ஒரு மரம் நடப்படும் என்றார்கள்.  (அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : இப்னுமாஜா 3797)
ஸுப்ஹானல்லாஹி அளீம் வபி ஹம்திஹீ என யாரேனும் கூறினால் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு மரம் நடப்படுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்-ரலி, நூல்: திர்மிதீ 3386)
என்னை இரவில் அழைத்துச் செல்லப்பட்ட -மிஃராஜ் பயணத்தின்- போது இப்ராஹீம் (அலை) அவர்களை சந்தித்தேன். அவர்கள் என்னிடம், முஹம்மதே! உங்களுடைய சமுதாயத்தினருக்கு என்னுடைய ஸலாமைக் கூறுங்கள்! நிச்சயமாக மிகத் தூய்மையான மணலையும் சுவையான தண்ணீரையும் கொண்ட சொர்க்கத்தில் பொட்டல் வெளியும் உள்ளது. அதில் நடவேண்டியது சுப்ஹானல்லாஹ், வல்ஹம்து லில்லாஹ், வலா இலாஹ இல்லல்லாஹ், வல்லாஹு அக்பர் என்பதாகும் என்பதையும் அவர்களுக்கு அறிவித்துவிடுங்கள்! என்று கூறியதாக நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். (அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் -ரலி, நூல் : திர்மிதீ 3384)
அப்துல்லாஹ் இப்னு கைஸே! சொர்க்கத்தின் பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷத்தை உமக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான், அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள்! என்றேன். அதற்கவர்கள், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று கூறு! என்றார்கள். (அறிவிப்பவர் : அபூ மூஸா -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம் 4873)
பாதுகாப்புக் கேடயம்
''லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்கலஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹ்வ அலா குல்­ ஷையின் கதீர் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சி அதிகாரம் உரியது.  அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது.  அவன் எல்லாவற்றின் மீதும் வ­மையுள்ளவன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்கின்றாரோ அவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமமாகும்.  மேலும் அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும்.  அவரது கணக்கி­ருந்து நூறு தவறுகள் அழிக்கப் படும்.  மேலும் அடுத்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும்.  மேலும் அவர் புரிந்த நற்செயலை விட சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது.  ஒருவர் இதை விட அதிகமான ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி).  நூல் : புகாரி 6403
''என்னுடைய அடியான் என்னை நினைவு கூர்ந்து கொண்டும், என் தியானத்தால் தன் உதடுகளை அசைத்துக் கொண்டு இருக்கும் வரையில் நான் அவனுடன் இருக்கிறேன் என்று அல்லாஹ் கூறுகிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். இப்னுமாஜா
கடை வீதியில் நுழையும் ஒருவர், லா யிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து, யுஹ்யீ வயுமீத்து, வஹுவ ஹைய்யுன் லாயமூத்து, பியதிஹில் கைரு, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் எனக் கூறுவரானால் அவருக்கு 10 லட்சம் நன்மைகளை அல்லாஹ் எழுதுகிறான். 10 லட்சம் தீமைகளை அல்லாஹ் அழிக்கின்றான். 10 லட்சம் அந்தஸத்துகளை உயர்த்துகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். -மற்றொரு அறிவிப்பில்- அவருக்கு சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டிக் கொடுக்கின்றான் என்றும் வந்துள்ளது.(அறிவிப்பவர் : உமர் இப்னு கத்தாப் -ரலி, நூற்கள் : திர்மிதீ 3350-3351, ஹாகிம்

திருமறைக் குர்ஆன் ஓதுவதால் மலக்குகளுடன் சஞ்சரிப்பவர்

குர்ஆனை நன்கு மனனம் செய்து தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர் இறைவனுக்குக் கட்டுப்பட்ட கண்ணியமிக்க வானவத் தூதர்களுடன் இருக்கின்றார்.  சிரமம் மேற்கொண்டு தட்டுத் தடுமாறி ஓதுபவருக்கு இரு கூலிகள் இருக்கின்றன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல்கள் : முஸ்லிம், திர்மிதி
எழுத்துக்குப் பத்து நன்மை!
''அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு!  ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும்.  அலிஃப், லாம், மீம் லி என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன்.  மாறாக, அலிஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல் : திர்மிதி
''யார் அல்லாஹ்விடம் என் மீது அருள் புரியுமாறு ஒரு தடவை துஆச் செய்கின்றாரோ அவர் மீது அல்லாஹ் பத்து தடவை அருள் புரிகின்றான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)நூல் : முஸ்லிம் 577
(அல்குர்ஆனை ஓதி, அதன்படி செயல்பட்டவருக்கு பரிந்துரை செய்வதற்காக) மறுமை நாளில் அல்குர்ஆன் வரும். அப்போது அது, இரட்சகனே! இவருக்கு ஆடை அணிவிப்பாயாக! என்று கூறும். உடனே அவருக்கு கண்ணியமான கிரீடம் அணிவிக்கப்படும். அது மீண்டும், இரட்சகனே! இவருக்கு மேலும் வழங்குவாயாக! என்று கூறும். உடனே அவருக்கு கண்ணியமான ஆடை அணிவிக்கப்படும். மீண்டும் அது, இரட்சகனே! இவரை நீ பொருந்திக் கொள்வாயாக! என்று கூறும், அப்போது நீர் ஓதுவீராக! உயர்ந்து செல்வீராக! ஒவ்வொரு வசனத்திற்கும் ஒரு நன்மை அதிகரிக்கப்படும் என்று அவருக்குக் கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்:அபூஹுரைரா-ரலி,நூல்:திர்மிதீ2839)

கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஆயத்துல் குர்ஸிய்யை ஓதுபவர் சொர்க்கம் செல்ல அவரின் மரணம்தான் தடையாக உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூ உமாமா -ரலி, நூல் : நஸயீ -அமலுல் யவ்மி வல்லைலா)
குபா மஸ்ஜிதில் அன்ஸாரிகளுக்கு தொழுவைத்துக் கொண்டிருந்த ஒருவர் ஒவ்வொரு ரகஅத்திலும் குல் ஹுவல்லாஹு அஹத் அத்தியாயத்தை ஓதிவிட்டு அதற்குப் பிறகு மற்ற வசனங்களை ஓதுவதை வழமையாக்கிக் கொண்டிருந்தார். இதனைப் பற்றி விசாரித்த நபி (ஸல்) அவர்கள், நீர் ஒவ்வொரு ரகஅத்திலும் இந்த அத்தியாயத்தை ஓதக் காரணம் என்ன? என்று கேட்டார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! நிச்சயமாக நான் அதனை நேசிக்கின்றேன்! என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நிச்சயமாக நீர் அதனை நேசிப்பது உன்னை சொர்க்கத்தில் நுழைவித்துவிடும் என்றார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி, அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூல் : திர்மிதீ 2826)

தர்மம் செய்வதால் ஏற்படும் பலன்கள்

நரகை விட்டு காக்கும் பேரீச்சம்பழம்
''அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் பேசாமல் இருப்பதில்லை. அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளர் எவரும் இருக்க மாட்டார். பிறகு அவர் கூர்ந்து பார்ப்பார். தமக்கு முன்புறம் எதையும் அவர் காண மாட்டார்.  பிறகு தமக்கு எதிரே பார்ப்பார். அப்போது அவரை (நரக) நெருப்பு தான் வரவேற்கும். ஆகவே முடிந்தால், பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்தி­ருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி),  நூல்: புகாரி 6539
எவர் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம்பழத்தின் அளவு தர்மம் செய்தாரோ லி அல்லாஹ் பரிசுத்தமானதைத் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டான் லி அதை அல்லாஹ் தனது வலக்கரத்தால் ஏற்றுக் கொண்டு, பிறகு நீங்கள் உங்கள் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலை போல் உயரும் அளவிற்கு வளர்த்து விடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1410
நல்ல வார்த்தைகளைப் பேசுதல்
நல்ல வார்த்தை பேசுவது தர்மமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா )ரலி))நூல்: புகாரி 6023
சொற்கத்தில் வீடு ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள்
"எவர் ஒரு நாளைக்கு பன்னிரண்டு ரக்அத் ஸுன்னத் தொழுது வருவாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகிறான். அவைகளாவன: லுஹருக்கு முன் 4 ரக்அத்துகள், லுஹருக்குப் பின் 2 ரக்அத்துகள், மஃரிபுக்குப் பின் 2 ரக்அத்துகள், இஷாவுக்குப்பின் 2 ரக்அத்துகள், பஜ்ருக்கு முன் 2 ரக்அத்துகள்". திர்மிதி
ஸலாம் கூறுவதன் சிறப்பு
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ''இஸ்லாத்தில் சிறந்தது எது?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''நீர் (மக்களுக்கு) உணவளிப்பதும், அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் நீர் ஸலாம் கூறுவதுமாகும்'' என்று கூறினார்கள்.           அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்:புகாரி 12
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும்'' என்று கூறினார். அதற்கு நபியவர்கள் (பதில்) சலாமை அவருக்குக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்த போது ''(இவருக்கு) பத்து (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என்று கூறினார்கள். பிறகு மற்றொரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்து கொண்டார். அப்போது ''(இவருக்கு) இருபது (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மூன்றாவதாக) மற்றொரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிச் சொன்னார்கள். பிறகு அம்மனிதர் அமர்ந்து கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''(இவருக்கு) முப்பது (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)  நூல்: திர்மிதீ 2613
பெற்றோருக்கு பணிவிடை செய்பவனுக்கு சொற்க்கம்
சொர்க்க வாயில்களில் சிறந்த வாயில் தந்தை ஆவார். நீ விரும்பினால் அந்த வாயிலை பாதுகாத்துக்கொள்! அல்லது வீணாக்கிவிடு! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூ தர்தா -ரலி, நூற்கள் : திர்மிதீ 1822, இப்னுமாஜா, அஹ்மத், இப்னு ஹிப்பான்) 
அல்லாஹ்வின் தூதரே! நான் போருக்குச் செல்ல முடிவு செய்துள்ளேன். அதுபற்றி உங்களிடம் ஆலோசிக்க வந்துள்ளேன்! என்று ஜாஹிமா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்;. அதற்கு நபி (ஸல்) அவர்கள் உமக்கு தாய் இருக்கின்றாரா? என்று கேட்டார்கள். அதற்கவர், ஆம்! என்றார். அப்படியானால் அவருக்கு முறையாகப் பணிவிடை செய்! நிச்சயமாக சொர்க்கம் அவரின் இரு கால்களுக்குக் கீழே உள்ளது என்றார்கள்.
(அறிவிப்பவர் : முஆவியா இப்னு ஜாஹிமா -ரலி, நூற்கள் : அஹ்மத், நஸாயீ 3053, ஹாகிம்)
அல்லாஹ்வின் பொருத்தம் தந்தையின் பொருத்தத்தில் உள்ளது. அல்லாஹ்வின் கோபம் தந்தையின் கோபத்தில் உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் -ரலி, நூற்கள் : திர்மிதீ 1821, ஹாகிம், இப்னுஹிப்பான்)
நோய் விசாரிக்க செல்பவனுக்கு சொற்கத்தின் பூங்கா
நோய் விசாரிப்பவர் நோயாளியை விட்டும்- திரும்பும் வரை சொர்க்கத் தோட்டத்தில் இருக்கின்றார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : ஸவ்பான்-ரலி, நூல் : முஸ்லிம் 4657)
யாரேனும் ஒரு முஸ்லிம் ஒரு முஸ்லிம் நோயாளியை காலையில் விசாரிக்கச் சென்றால் 70.000 மலக்குகள் அவருக்காக மாலை வரை பிரார்த்தனை செய்கின்றார்கள். அவர் மாலையில் விசாரிக்கச் சென்றால் காலை வரை 70.000 மலக்குகள் அவருக்காக பிரார்த்தனை செய்கின்றார்கள். மேலும் சொர்க்கத்தில் அவருக்குக் காய்த்துக் குலுங்கும் தோட்டம் உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அலீ இப்னு அபீதாலிப் -ரலி, நூற்கள் : திர்மிதீ 891, இப்னுமாஜா, அபூதாவூத்)
மார்க்க சகோதரரை சந்திப்பவருக்கு சொற்க்கம்
ஒரு அடியான் தன் மார்க்கச் சகோதரனை அல்லாஹ்வுக்காக சந்திக்கச் சென்றால் வானத்திலிருந்து அழைப்பவர் அவரை அழைத்து: நீ சிறந்த காரியம் செய்துவிட்டாய்! இதனால் உனக்கு சிறந்த சொர்க்கம் கிடைத்துவிட்டது! என்று கூறுவார். அதுமட்டுமல்ல! அல்லாஹ் தன் அர்ஷைச் சுற்றியுள்ள மலக்குகளிடம் : என்னுடைய அடியான் எனக்காக -அவரைச்- சந்திக்கச் சென்றுள்ளான்! எனவே அவனுக்கு நான் விருந்து உபசரணை செய்வேன்! என்று கூறுவான். எனவே அவன் சொர்க்கத்தைத் தவிர மற்ற கூலியைக் கொண்டு அவரை திருப்தியடையச் செய்யமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூற்கள் : பஸ்ஸார், அபூயஃலா)
உதவி செய்வதால் கிடைக்கும் பலன்கள்
ஒரு மனிதர் வழியில் இருந்த முள் மரத்தைக் கடந்து சென்றார். அப்போது, ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது முஸ்­ம்களுக்குத் தொல்லை தரக் கூடாது என்பதற்காக இதை அவர்களை விட்டும் அகற்றுவேன்'' என்று கூறி (அதை நிறைவேற்றி)னார். இதனால் அவர் சுவர்க்கத்தில் நுழைக்கப்பட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: முஸ்லிம் (4744)
தொல்லை தரும் பொருளை அகற்றிப் போடுவது தர்மமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 246
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான். அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ்(ர­)நூல்: புகாரி 7376
 ''ஒரு மனிதர் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதி­ருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு கிணற்றி­ருந்து அவர் வெளியே வந்த போது நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனதிற்குள்) ''எனக்கு ஏற்பட்டதைப் போன்றே இந்த நாய்க்கும் (கடுமையான தாகம்) ஏற்பட்டிருக் கின்றது போலும்'' என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கி, தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்கும் புகட்டினார். அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரது பாவங்களை) மன்னித்தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், ''அல்லாஹ்வின் தூதரே!  கால்நடைகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ''ஆம்! உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா(ரலி)நூல்: புகாரி 2363
அழைப்புப் பணிக்கு சிகப்பு நிற ஒட்டகம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உன் மூலமாக ஒரேயொருவருக்கு அல்லாஹ் நேர்வழியளிப்பது சிவப்பு ஒட்டகைகளை விட உங்களுக்குச் சிறந்ததாகும்.அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ர­),  நூல்: புகாரி (4210)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (மக்களை) நேரான வழியின் பால் அழைக்கிறாரோ அவருக்கு அதைப் பின்பற்றுபவரின் கூ­களைப் போன்ற கூ­ கிடைக்கும். இவ்வாறு கொடுப்பது அதைச் செய்தவர்களின் கூ­யி­ருந்து கொஞ்சம் கூட குறைத்து விடாது.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்­ம் (4831)
பெண்பிள்ளைகளை ஒழுக்கத்துடன் வளர்பவர் நபியுடன் இருப்பார்
இரண்டு பெண் குழந்தைகளை பருவமடையும் வரை -முறையாக- வளர்த்தவரும் நானும் மறுமை நாளில் இவ்வாறு இருப்போம் என நபி (ஸல்) அவர்கள் விரல்களை இணைத்துக் காண்பித்தார்கள். (அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : முஸ்லிம் 4765)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :இரு சிறுமிகளை சுமந்தவளாக என்னிடம் ஒரு ஏழைப் பெண் வந்தார். நான் அவருக்கு மூன்று பேரீத்தம் பழங்களைக் கொடுத்தேன். இருவருக்கும் ஒவ்வொரு பேரீத்தம் பழத்தைக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள ஒன்றை தான் உண்பதற்காக வாய் வரை உயர்த்தி விட்டார். அப்போது அவருடைய இரு பிள்ளைகளும் அதனையும் கேட்டனர். தான் உண்ண நினைத்த அப்பழத்தை இரண்டாகப் பிளந்து அவ்விருவருக்கும் கொடுத்தார். அவருடைய இச்செயலைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்ட நான், இச்சம்பவத்தை நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அதற்கவர்கள், அவளின் இச்செயலின் காரணமாக நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தைக் கடமையாக்கிவிட்டான். அல்லது அவளை நரகத்திலிருந்து உரிமை விட்டுவிட்டான் என்றார்கள். (நூல் : முஸ்லிம் 4764)
ஒருவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்து அவர்களை ஆதரித்து, இரக்கம் காட்டி, பொறுப்புடன் வளர்த்தால் அவருக்கு நிச்சயமாக சொர்க்கம் கிடைத்துவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, அல்லாஹ்வின் தூதரே! இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தால்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தாலும்தான்! என்று கூறினார்கள். அவர்கள் ஒரு பெண் பிள்ளையைப் பற்றி கேட்டிருந்தால் ஒரு பெண் பிள்ளை இருந்தாலும்தான்! என நிச்சயமாகக் கூறியிருப்பார்கள் என அக்கூட்டத்தில் இருந்த சிலர் கருதினர்.(அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : அஹ்மத் 13729)
பொறுமையால் கிடைக்கும் பலன்
''ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உட்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய  பாவங்களி­ருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் (ர­) நூல்: புகாரீ (5641)