இந்த இணையதளத்திற்கு வருகை தரும் உங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ

Monday 2 July 2012

சிறிய செயல் பெரிய பலன்


இறை நினைவுக்கு சொற்கத்தில் மரம்
பயிரை நட்டிக் கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்களை கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள், அபூஹுரைராவே! என்ன ஊன்றுகிறீர்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், நான் எனக்காக ஒரு கன்றை ஊன்றுகிறேன் என்றார்கள். இதனை விட உமக்குச் சிறந்த பயிரை உமக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று கேட்க, அறிவியுங்கள்! அல்லாஹ்வின் தூதரே! என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் என்று கூறுவீராக! இவை ஒவ்வொன்றிற்கும் சொர்க்கத்தில் ஒரு மரம் நடப்படும் என்றார்கள்.  (அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : இப்னுமாஜா 3797)
ஸுப்ஹானல்லாஹி அளீம் வபி ஹம்திஹீ என யாரேனும் கூறினால் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு மரம் நடப்படுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்-ரலி, நூல்: திர்மிதீ 3386)
என்னை இரவில் அழைத்துச் செல்லப்பட்ட -மிஃராஜ் பயணத்தின்- போது இப்ராஹீம் (அலை) அவர்களை சந்தித்தேன். அவர்கள் என்னிடம், முஹம்மதே! உங்களுடைய சமுதாயத்தினருக்கு என்னுடைய ஸலாமைக் கூறுங்கள்! நிச்சயமாக மிகத் தூய்மையான மணலையும் சுவையான தண்ணீரையும் கொண்ட சொர்க்கத்தில் பொட்டல் வெளியும் உள்ளது. அதில் நடவேண்டியது சுப்ஹானல்லாஹ், வல்ஹம்து லில்லாஹ், வலா இலாஹ இல்லல்லாஹ், வல்லாஹு அக்பர் என்பதாகும் என்பதையும் அவர்களுக்கு அறிவித்துவிடுங்கள்! என்று கூறியதாக நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். (அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் -ரலி, நூல் : திர்மிதீ 3384)
அப்துல்லாஹ் இப்னு கைஸே! சொர்க்கத்தின் பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷத்தை உமக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான், அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள்! என்றேன். அதற்கவர்கள், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று கூறு! என்றார்கள். (அறிவிப்பவர் : அபூ மூஸா -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம் 4873)
பாதுகாப்புக் கேடயம்
''லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்கலஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹ்வ அலா குல்­ ஷையின் கதீர் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சி அதிகாரம் உரியது.  அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது.  அவன் எல்லாவற்றின் மீதும் வ­மையுள்ளவன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்கின்றாரோ அவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமமாகும்.  மேலும் அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும்.  அவரது கணக்கி­ருந்து நூறு தவறுகள் அழிக்கப் படும்.  மேலும் அடுத்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும்.  மேலும் அவர் புரிந்த நற்செயலை விட சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது.  ஒருவர் இதை விட அதிகமான ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி).  நூல் : புகாரி 6403
''என்னுடைய அடியான் என்னை நினைவு கூர்ந்து கொண்டும், என் தியானத்தால் தன் உதடுகளை அசைத்துக் கொண்டு இருக்கும் வரையில் நான் அவனுடன் இருக்கிறேன் என்று அல்லாஹ் கூறுகிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். இப்னுமாஜா
கடை வீதியில் நுழையும் ஒருவர், லா யிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து, யுஹ்யீ வயுமீத்து, வஹுவ ஹைய்யுன் லாயமூத்து, பியதிஹில் கைரு, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் எனக் கூறுவரானால் அவருக்கு 10 லட்சம் நன்மைகளை அல்லாஹ் எழுதுகிறான். 10 லட்சம் தீமைகளை அல்லாஹ் அழிக்கின்றான். 10 லட்சம் அந்தஸத்துகளை உயர்த்துகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். -மற்றொரு அறிவிப்பில்- அவருக்கு சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டிக் கொடுக்கின்றான் என்றும் வந்துள்ளது.(அறிவிப்பவர் : உமர் இப்னு கத்தாப் -ரலி, நூற்கள் : திர்மிதீ 3350-3351, ஹாகிம்

திருமறைக் குர்ஆன் ஓதுவதால் மலக்குகளுடன் சஞ்சரிப்பவர்

குர்ஆனை நன்கு மனனம் செய்து தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர் இறைவனுக்குக் கட்டுப்பட்ட கண்ணியமிக்க வானவத் தூதர்களுடன் இருக்கின்றார்.  சிரமம் மேற்கொண்டு தட்டுத் தடுமாறி ஓதுபவருக்கு இரு கூலிகள் இருக்கின்றன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல்கள் : முஸ்லிம், திர்மிதி
எழுத்துக்குப் பத்து நன்மை!
''அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு!  ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும்.  அலிஃப், லாம், மீம் லி என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன்.  மாறாக, அலிஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல் : திர்மிதி
''யார் அல்லாஹ்விடம் என் மீது அருள் புரியுமாறு ஒரு தடவை துஆச் செய்கின்றாரோ அவர் மீது அல்லாஹ் பத்து தடவை அருள் புரிகின்றான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)நூல் : முஸ்லிம் 577
(அல்குர்ஆனை ஓதி, அதன்படி செயல்பட்டவருக்கு பரிந்துரை செய்வதற்காக) மறுமை நாளில் அல்குர்ஆன் வரும். அப்போது அது, இரட்சகனே! இவருக்கு ஆடை அணிவிப்பாயாக! என்று கூறும். உடனே அவருக்கு கண்ணியமான கிரீடம் அணிவிக்கப்படும். அது மீண்டும், இரட்சகனே! இவருக்கு மேலும் வழங்குவாயாக! என்று கூறும். உடனே அவருக்கு கண்ணியமான ஆடை அணிவிக்கப்படும். மீண்டும் அது, இரட்சகனே! இவரை நீ பொருந்திக் கொள்வாயாக! என்று கூறும், அப்போது நீர் ஓதுவீராக! உயர்ந்து செல்வீராக! ஒவ்வொரு வசனத்திற்கும் ஒரு நன்மை அதிகரிக்கப்படும் என்று அவருக்குக் கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்:அபூஹுரைரா-ரலி,நூல்:திர்மிதீ2839)

கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஆயத்துல் குர்ஸிய்யை ஓதுபவர் சொர்க்கம் செல்ல அவரின் மரணம்தான் தடையாக உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூ உமாமா -ரலி, நூல் : நஸயீ -அமலுல் யவ்மி வல்லைலா)
குபா மஸ்ஜிதில் அன்ஸாரிகளுக்கு தொழுவைத்துக் கொண்டிருந்த ஒருவர் ஒவ்வொரு ரகஅத்திலும் குல் ஹுவல்லாஹு அஹத் அத்தியாயத்தை ஓதிவிட்டு அதற்குப் பிறகு மற்ற வசனங்களை ஓதுவதை வழமையாக்கிக் கொண்டிருந்தார். இதனைப் பற்றி விசாரித்த நபி (ஸல்) அவர்கள், நீர் ஒவ்வொரு ரகஅத்திலும் இந்த அத்தியாயத்தை ஓதக் காரணம் என்ன? என்று கேட்டார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! நிச்சயமாக நான் அதனை நேசிக்கின்றேன்! என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நிச்சயமாக நீர் அதனை நேசிப்பது உன்னை சொர்க்கத்தில் நுழைவித்துவிடும் என்றார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி, அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூல் : திர்மிதீ 2826)

தர்மம் செய்வதால் ஏற்படும் பலன்கள்

நரகை விட்டு காக்கும் பேரீச்சம்பழம்
''அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் பேசாமல் இருப்பதில்லை. அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளர் எவரும் இருக்க மாட்டார். பிறகு அவர் கூர்ந்து பார்ப்பார். தமக்கு முன்புறம் எதையும் அவர் காண மாட்டார்.  பிறகு தமக்கு எதிரே பார்ப்பார். அப்போது அவரை (நரக) நெருப்பு தான் வரவேற்கும். ஆகவே முடிந்தால், பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்தி­ருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி),  நூல்: புகாரி 6539
எவர் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம்பழத்தின் அளவு தர்மம் செய்தாரோ லி அல்லாஹ் பரிசுத்தமானதைத் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டான் லி அதை அல்லாஹ் தனது வலக்கரத்தால் ஏற்றுக் கொண்டு, பிறகு நீங்கள் உங்கள் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலை போல் உயரும் அளவிற்கு வளர்த்து விடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1410
நல்ல வார்த்தைகளைப் பேசுதல்
நல்ல வார்த்தை பேசுவது தர்மமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா )ரலி))நூல்: புகாரி 6023
சொற்கத்தில் வீடு ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள்
"எவர் ஒரு நாளைக்கு பன்னிரண்டு ரக்அத் ஸுன்னத் தொழுது வருவாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகிறான். அவைகளாவன: லுஹருக்கு முன் 4 ரக்அத்துகள், லுஹருக்குப் பின் 2 ரக்அத்துகள், மஃரிபுக்குப் பின் 2 ரக்அத்துகள், இஷாவுக்குப்பின் 2 ரக்அத்துகள், பஜ்ருக்கு முன் 2 ரக்அத்துகள்". திர்மிதி
ஸலாம் கூறுவதன் சிறப்பு
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ''இஸ்லாத்தில் சிறந்தது எது?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''நீர் (மக்களுக்கு) உணவளிப்பதும், அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் நீர் ஸலாம் கூறுவதுமாகும்'' என்று கூறினார்கள்.           அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்:புகாரி 12
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும்'' என்று கூறினார். அதற்கு நபியவர்கள் (பதில்) சலாமை அவருக்குக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்த போது ''(இவருக்கு) பத்து (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என்று கூறினார்கள். பிறகு மற்றொரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்து கொண்டார். அப்போது ''(இவருக்கு) இருபது (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மூன்றாவதாக) மற்றொரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிச் சொன்னார்கள். பிறகு அம்மனிதர் அமர்ந்து கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''(இவருக்கு) முப்பது (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)  நூல்: திர்மிதீ 2613
பெற்றோருக்கு பணிவிடை செய்பவனுக்கு சொற்க்கம்
சொர்க்க வாயில்களில் சிறந்த வாயில் தந்தை ஆவார். நீ விரும்பினால் அந்த வாயிலை பாதுகாத்துக்கொள்! அல்லது வீணாக்கிவிடு! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூ தர்தா -ரலி, நூற்கள் : திர்மிதீ 1822, இப்னுமாஜா, அஹ்மத், இப்னு ஹிப்பான்) 
அல்லாஹ்வின் தூதரே! நான் போருக்குச் செல்ல முடிவு செய்துள்ளேன். அதுபற்றி உங்களிடம் ஆலோசிக்க வந்துள்ளேன்! என்று ஜாஹிமா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்;. அதற்கு நபி (ஸல்) அவர்கள் உமக்கு தாய் இருக்கின்றாரா? என்று கேட்டார்கள். அதற்கவர், ஆம்! என்றார். அப்படியானால் அவருக்கு முறையாகப் பணிவிடை செய்! நிச்சயமாக சொர்க்கம் அவரின் இரு கால்களுக்குக் கீழே உள்ளது என்றார்கள்.
(அறிவிப்பவர் : முஆவியா இப்னு ஜாஹிமா -ரலி, நூற்கள் : அஹ்மத், நஸாயீ 3053, ஹாகிம்)
அல்லாஹ்வின் பொருத்தம் தந்தையின் பொருத்தத்தில் உள்ளது. அல்லாஹ்வின் கோபம் தந்தையின் கோபத்தில் உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் -ரலி, நூற்கள் : திர்மிதீ 1821, ஹாகிம், இப்னுஹிப்பான்)
நோய் விசாரிக்க செல்பவனுக்கு சொற்கத்தின் பூங்கா
நோய் விசாரிப்பவர் நோயாளியை விட்டும்- திரும்பும் வரை சொர்க்கத் தோட்டத்தில் இருக்கின்றார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : ஸவ்பான்-ரலி, நூல் : முஸ்லிம் 4657)
யாரேனும் ஒரு முஸ்லிம் ஒரு முஸ்லிம் நோயாளியை காலையில் விசாரிக்கச் சென்றால் 70.000 மலக்குகள் அவருக்காக மாலை வரை பிரார்த்தனை செய்கின்றார்கள். அவர் மாலையில் விசாரிக்கச் சென்றால் காலை வரை 70.000 மலக்குகள் அவருக்காக பிரார்த்தனை செய்கின்றார்கள். மேலும் சொர்க்கத்தில் அவருக்குக் காய்த்துக் குலுங்கும் தோட்டம் உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அலீ இப்னு அபீதாலிப் -ரலி, நூற்கள் : திர்மிதீ 891, இப்னுமாஜா, அபூதாவூத்)
மார்க்க சகோதரரை சந்திப்பவருக்கு சொற்க்கம்
ஒரு அடியான் தன் மார்க்கச் சகோதரனை அல்லாஹ்வுக்காக சந்திக்கச் சென்றால் வானத்திலிருந்து அழைப்பவர் அவரை அழைத்து: நீ சிறந்த காரியம் செய்துவிட்டாய்! இதனால் உனக்கு சிறந்த சொர்க்கம் கிடைத்துவிட்டது! என்று கூறுவார். அதுமட்டுமல்ல! அல்லாஹ் தன் அர்ஷைச் சுற்றியுள்ள மலக்குகளிடம் : என்னுடைய அடியான் எனக்காக -அவரைச்- சந்திக்கச் சென்றுள்ளான்! எனவே அவனுக்கு நான் விருந்து உபசரணை செய்வேன்! என்று கூறுவான். எனவே அவன் சொர்க்கத்தைத் தவிர மற்ற கூலியைக் கொண்டு அவரை திருப்தியடையச் செய்யமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூற்கள் : பஸ்ஸார், அபூயஃலா)
உதவி செய்வதால் கிடைக்கும் பலன்கள்
ஒரு மனிதர் வழியில் இருந்த முள் மரத்தைக் கடந்து சென்றார். அப்போது, ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது முஸ்­ம்களுக்குத் தொல்லை தரக் கூடாது என்பதற்காக இதை அவர்களை விட்டும் அகற்றுவேன்'' என்று கூறி (அதை நிறைவேற்றி)னார். இதனால் அவர் சுவர்க்கத்தில் நுழைக்கப்பட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: முஸ்லிம் (4744)
தொல்லை தரும் பொருளை அகற்றிப் போடுவது தர்மமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 246
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான். அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ்(ர­)நூல்: புகாரி 7376
 ''ஒரு மனிதர் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதி­ருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு கிணற்றி­ருந்து அவர் வெளியே வந்த போது நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனதிற்குள்) ''எனக்கு ஏற்பட்டதைப் போன்றே இந்த நாய்க்கும் (கடுமையான தாகம்) ஏற்பட்டிருக் கின்றது போலும்'' என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கி, தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்கும் புகட்டினார். அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரது பாவங்களை) மன்னித்தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், ''அல்லாஹ்வின் தூதரே!  கால்நடைகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ''ஆம்! உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா(ரலி)நூல்: புகாரி 2363
அழைப்புப் பணிக்கு சிகப்பு நிற ஒட்டகம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உன் மூலமாக ஒரேயொருவருக்கு அல்லாஹ் நேர்வழியளிப்பது சிவப்பு ஒட்டகைகளை விட உங்களுக்குச் சிறந்ததாகும்.அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ர­),  நூல்: புகாரி (4210)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (மக்களை) நேரான வழியின் பால் அழைக்கிறாரோ அவருக்கு அதைப் பின்பற்றுபவரின் கூ­களைப் போன்ற கூ­ கிடைக்கும். இவ்வாறு கொடுப்பது அதைச் செய்தவர்களின் கூ­யி­ருந்து கொஞ்சம் கூட குறைத்து விடாது.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்­ம் (4831)
பெண்பிள்ளைகளை ஒழுக்கத்துடன் வளர்பவர் நபியுடன் இருப்பார்
இரண்டு பெண் குழந்தைகளை பருவமடையும் வரை -முறையாக- வளர்த்தவரும் நானும் மறுமை நாளில் இவ்வாறு இருப்போம் என நபி (ஸல்) அவர்கள் விரல்களை இணைத்துக் காண்பித்தார்கள். (அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : முஸ்லிம் 4765)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :இரு சிறுமிகளை சுமந்தவளாக என்னிடம் ஒரு ஏழைப் பெண் வந்தார். நான் அவருக்கு மூன்று பேரீத்தம் பழங்களைக் கொடுத்தேன். இருவருக்கும் ஒவ்வொரு பேரீத்தம் பழத்தைக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள ஒன்றை தான் உண்பதற்காக வாய் வரை உயர்த்தி விட்டார். அப்போது அவருடைய இரு பிள்ளைகளும் அதனையும் கேட்டனர். தான் உண்ண நினைத்த அப்பழத்தை இரண்டாகப் பிளந்து அவ்விருவருக்கும் கொடுத்தார். அவருடைய இச்செயலைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்ட நான், இச்சம்பவத்தை நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அதற்கவர்கள், அவளின் இச்செயலின் காரணமாக நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தைக் கடமையாக்கிவிட்டான். அல்லது அவளை நரகத்திலிருந்து உரிமை விட்டுவிட்டான் என்றார்கள். (நூல் : முஸ்லிம் 4764)
ஒருவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்து அவர்களை ஆதரித்து, இரக்கம் காட்டி, பொறுப்புடன் வளர்த்தால் அவருக்கு நிச்சயமாக சொர்க்கம் கிடைத்துவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, அல்லாஹ்வின் தூதரே! இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தால்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தாலும்தான்! என்று கூறினார்கள். அவர்கள் ஒரு பெண் பிள்ளையைப் பற்றி கேட்டிருந்தால் ஒரு பெண் பிள்ளை இருந்தாலும்தான்! என நிச்சயமாகக் கூறியிருப்பார்கள் என அக்கூட்டத்தில் இருந்த சிலர் கருதினர்.(அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : அஹ்மத் 13729)
பொறுமையால் கிடைக்கும் பலன்
''ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உட்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய  பாவங்களி­ருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் (ர­) நூல்: புகாரீ (5641)

No comments:

Post a Comment