இந்த இணையதளத்திற்கு வருகை தரும் உங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ

Sunday 17 June 2012

தொழுகையின் அவசியமும்,தொழதவனின் நிலையும்



படைக்கப்பட்ட நோக்கம்
மனிதர்களையும் ஜின்களையும் என்னை வணங்குவதற்கே அன்றி வேறெதற்கும் படைக்கவில்லை.அல்குர்ஆன் 51:56
தொழுகை கடமை
وَأَقِيمُواْ الصَّلاَةَ وَآتُواْ الزَّكَاةَ وَمَا تُقَدِّمُواْ لأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللّهِ إِنَّ اللّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! உங்களுக்காக முன் கூட்டி அனுப்பும் எந்த நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள்  செய்வதை அல்லாஹ் பார்ப்பவன். 2 :110

وَأَنْ أَقِيمُواْ الصَّلاةَ وَاتَّقُوهُ وَهُوَ الَّذِيَ إِلَيْهِ تُحْشَرُونَ
தொழுகையை நிலை நாட்டுங்கள்! அவனையே அஞ்சுங்கள்! அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்! 6:72

'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள்இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல் தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்துவழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். புகாரி 8

இஸ்லாம் என்பது
இஸ்லாம் என்பது பல கயிறுகளுடையது (பல சட்டங்கள்,பல நல்ல காரியங்கள்) இவற்றில் மக்கள் ஒவ்வொரு கயிறாக துண்டித்து வருவார்கள் ஒரு கயிறு துண்டிக்கப் படும் போதெல்லாம் மக்கள் இன்னொரு கயிறைப் பற்றிப் பிடிப்பார்கள் கிழே விழ மாட்டார்கள். முதலில் விடக்கூடிய கயிறு இஸ்லாமிய ஆட்சி,இறுதியாகவிடக்கூடியது தொழுகையாகும்.தொழுகையென்பது நம்மை பாதுகாக்கக் கூடியது. அனஸ் (ரலி) நூல் :அஹ்மத் 21131

நேரம் குறிக்கப்பட்ட வணக்கம்
إِنَّ الصَّلاَةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا
நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது அல்குர்ஆன் 4:103

அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் நான்கேட்டபோது, 'தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்'' என்று பதில்கூறினார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். 'பெற்றோருக்கு நன்மை செய்தல்''என்றார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன்.'இறைவழியில் அறப்போர் புரிதல்'' என்றனர்.எனக்கு இவற்றை நபி(ஸல்) அவர்கள் அறிவித்தனர். (கேள்வியை) மேலும் நான்அதிகப்படுத்தியிருந்தால் நபி(ஸல்) அவர்களும் மேலும் சொல்லியிருப்பார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்உத்(ரலி) அறிவித்தார். புகாரி 572.

தொழுகையினால் ஏற்படும் பயன்கள்
யார் அழகிய முறையில் உளு எடுத்து தொழுகைக்காக பள்ளிக்கு நடந்து. செல்கின்றாரோ ஒவ்வொரு எட்டிற்கும் ஒரு நன்மை எழுதப்படும்,ஒரு பாவம் மன்னிக்கப்படும்,ஒரு தகுதி உயர்த்தப்படும் என்று நபி(ஸல்)கூறினார்கள். இப்னு மஸ்உத் (ரலி)முஸ்லிம்.1159

மானக்கேடான செயலை விட்டும் பாதுகாக்கும்
إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاء وَالْمُنكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ
நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும்.நிச்சயமாக,அல்லாஹ்வின் திக்ரு மிகவும் பெரிதா(ன சக்தியா)கும் அன்றியும் அல்லாஹ்நீங்கள்செய்பவற்றைநன்கறிகிறான்அல்குர்ஆன 29:45

ஐவேளைத் தொழுகைகள் பாவங்களின் பரிகாரங்களாகும்.
''உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்'' என்று தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது' என நபித் தோழர்கள் கூறினர். 'இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி - 528. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாவங்களைப் போக்கும்
ஒரு இளைஞர் தொழுகை நடத்தும் போது தொழுயின் நிலையை நீட்டித் தொழுகையை நடத்திக் கொண்டிருந்ததை பார்த்த அப்துல்லாஹ் இப்னு உமர் ( ரலி ) ஒரு அடியான் தொழ ஆரம்பித்த உடன் அவனுடைய பாவங்கள் அவனுடைய தலை மீது அல்லது அவனுடை தோள் மீது வைக்கப்படும்.அவன் ருகூஃ மற்றும் ஸஜ்தா வை நீண்ட நேரம் செய்யும் போது பாவங்கள் விழுந்து கொண்டே இருக்கும். இப்னு உமர் (ரலி) இப்னு ஹிப்பான் 1734.

ஃபஜர் மற்றும் அஸர் தொழுகையின் சிறப்பு
ஜரீர்(ரலி) அறிவித்தார்.நாங்கள் முழு நிலவுள்ள இரவில் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலவை நோக்கி 'இந்த நிலவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பது போல் நிச்சயமாக உங்களுடைய இறைவனைக் காண்பீர்கள்! சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்!'' என்று கூறிவிட்டு, 'சூரியன் உதிக்கும் முன்னரும் மறையும் முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைத் துதிப்பீராக!'' (திருக்குர்ஆன் 50:39) என்ற இறைவசனத்தையும் ஓதிக் காண்பித்தார்கள்.புகாரி 554.
'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' ''இரவு நேரத்து வானவர்களும் பகல் நேரத்து வானவாக்ளும் தொடர்ந்து உங்களிடம் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருப்பார்கள். பஜ்ருத் தொழுகையிலும் அஸர் தொழுகையிலும் இரண்டு சாராரும் சந்திக்கின்றனர். பின்னர் உங்களடன் இரவு தங்கியவர்கள் மேலேறிச் செல்கின்றனர். 'என் அடியார்களை எந்த நிலையில்விட்டு வந்தீர்கள்?' என்று அவர்களிடம் இறைவன் இது பற்றி தெரிந்து கொண்டே விசாரிப்பான். 'அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களிடம் சென்றோம். அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களைவிட்டுவிட்டு வருகிறோம்'' என்று அவர்கள் விடையளிப்பார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி. 555

அஸர் தொழுகை தவறிவிட்டவனின் பாவம்.
'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''யாருக்கு அஸர் தொழுகை தவறிவிட்டதோ அவன் குடும்பமும் சொத்துக்களும் அழிக்கப் பட்டவனைப்போன்று இருக்கிறான். Gfhup 552.

ஃபஜ்ர் சுன்னத்தின் சிறப்பு
உலகம் அதில் உள்ளவற்றை விட சிறந்தது என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆயிஷா(ரலி) முஸ்லிம் 1314

ஜமாஅத் தொழுகையின் சிறப்பு
ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுவது தனியாக தொழுவதை விட 27 மடங்கு சிறந்தது என்று நபி(ஸல்)கூறினார்கள். இப்னு உமர் (ரலி) முஸ்லிம் 1152
'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''என்னுடைய உயிர் எவனுடைய கரத்திலிருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! விறகுகளைக் கொண்டு வருமாறு நான் கட்டளையிட்டு அதன் படி விறகுகள் கொண்டு வரப்பட்டுப் பின்னர் தொழுகைக்கு அழைக்குமாறு நான் உத்தரவிட்டு, அதன்படி அழைக்கப்பட்டுப் பின்னர் ஒருவரை மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கட்டளையிட்டு, அதன் படி அவர் தொழுகை நடத்திப் பின்னர் தொழுகைக்கு வராமலிருக்கிற ஆண்களின் வீடுகளுக்குச் சென்று வீட்டோடு அவர்களை எரிப்பதற்கு நான் நினைத்ததுண்டு. என்னுடைய உயிர் யாருடைய கையில் இருக்கிறதோ அவரின் மீது ஆணையாகப் பள்ளியில் ஒரு துண்டு இறைச்சி, அல்லது ஆட்டுக் குளம்பு கொடுக்கப்படுகிறது என்று அவர்கள் எவரேனும் அறிவார்களானால் நிச்சயமாக இஷாத் தொழுகைக்காக ஜமாஅத்திற்கு வந்து விடுவார்கள்.Gfhup 644

பாங்கின் அழைப்பை செவியேற்றால்
நபி(ஸல்)அவர்களிடம் பார்வையற்ற ஒரு நபித்தோழர் வந்து அல்லாஹ்வின் தூதுரே என்னை பள்ளிக்கு அழைத்து வர எந்த வழிகாட்டியும் இல்லை ஆகையால் நான் வீட்டிலேயே தொழுவதற்கு அனுமதி தாருங்கள் என்று கேட்டார். நபி(ஸல்)அனுமதி அளித்து விட்டு அவர் திரும்பும் வேளையில்; அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூமே பாங்கினுடை வார்த்தைகள் உம்முடை காதுகளில் விழுகின்றதா?ஆம் யா ரஸுலுல்லாஹ் அப்படியானால் பாங்கின் அழைப்பிற்கு பதில் கூறியே ஆக வேண்டும். அபூஹுரைரா(ரலி) முஸ்லிம் 1157

நபி(ஸல்) அவர்களின் நோய் அதிகமாம் அதனால் வேதனை கடுமையானபோது, என்னுடைய வீட்டில் தங்கிச் பெறுவதற்காக மற்ற மனைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களும் அனுமதி வழங்கினர். அவர்கள் வெளியில் வரும்பொழுது இரண்டு பேர்களுக்கிடையில் தொங்கியவாறு வந்தார்கள். அப்போது அவர்களின் கால்  விரல்கள் பூமியில் கோடிட்டுக் கொண்டிருந்தன. நபி(ஸல்) அவர்கள் அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்கும் இடையில்தான் தொங்கிக் கொண்டு வந்தார்கள். ஆயிஷா(ரலி) அறிவித்தார்.Gfhup 665.

ஸுப்ஹு மற்றும் இஷாத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதன் சிறப்பு.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் ''ஸுப்ஹு இஷா ஆகிய தொழுகைகளை விட முனாஃபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரண்டு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதிலுள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு முஅத்தினுக்கு நான் கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுகை நடத்துமாறு கூறி, அதன் பின்பு எவரேனும் தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன். ''என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.Gfhup657

பேணித் தொழுபவருக்கு சொர்க்கம் உறுதி
பகலின் இருமுனைகளிலுள்ள (ஃபஜ்ர்; - அஸர்)இரு குளிர் நேரத் தொழுகைகளை தொழுபவர் சொர்க்கத்தில் நுழைவார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) முஸ்லிம் 1117

إِنَّ الَّذِينَ آمَنُواْ وَعَمِلُواْ الصَّالِحَاتِ وَأَقَامُواْ الصَّلاَةَ وَآتَوُاْ الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ
யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள் அல்குர்ஆன் 2:277

وَالَّذِينَ يُمَسَّكُونَ بِالْكِتَابِ وَأَقَامُواْ الصَّلاَةَ إِنَّا لاَ نُضِيعُ أَجْرَ الْمُصْلِحِينَ
எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலைநிறுத்துகிறார்களோ (அத்தகைய) நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்.அல்குர்ஆன் 7:170

وَالَّذِينَ صَبَرُواْ ابْتِغَاء وَجْهِ رَبِّهِمْ وَأَقَامُواْ الصَّلاَةَ وَأَنفَقُواْ مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلاَنِيَةً وَيَدْرَؤُونَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ أُوْلَئِكَ لَهُمْ عُقْبَى الدَّارِ
இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடி, பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள்¢ தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் (நன்முறையில்) செலவு செய்வார்கள் நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். இத்தகையோருக்கே மறுமையில் (சுவனபதி யென்னும்) நல்ல வீடு இருக்கிறது.அல்குர்ஆன் 13:22

அல்லாஹ்வை சந்திப்பவர்
யார் மறுமை நாளில் அல்லாஹ்வை முஸ்லிமாக சந்திக்க விருப்புகிறாரோ தொழுகை  அறிவிப்புச் செய்யப்படும் பள்ளிவாசலில் தொழுகையை பேணித் தொழுது கொள்ளட்டும்.ஏனெனில் அல்லாஹ் உங்கள் நபி(ஸல்)அவர்களுக்கு நேரிய காட்டியுள்ளான்.கூட்டுத் தொழுகை நேறிய வழிகளில் உள்ளதாகும்.கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்ளாதவரைப் போன்று நீங்களும் ஆகிவிட வேண்டாம்.அவ்வாறு நீங்கள் செய்தால் நபியின் வழி முறையை கைவிட்டவர் ஆவீர்கள். நபியின் வழி முறையை கைவிட்டால் நிச்சயம் நீங்கள் வழி தவறியவர் ஆவீர்கள். இப்னு மஸ்உத் (ரலி)முஸ்லிம்.1159

தொழாதவருக்கு நரகம்
· காலோடு கால் பின்னிக் கொள்ளும் அந்நாளில்;
· இழுத்துச் செல்லப்படுவது உமது இறைவனிடமே
· அவன் நம்பவுமில்லை தொழவுமில்லை அல்குர்ஆன்- 75:29-31
مَا سَلَكَكُمْ فِي سَقَرَ & قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّين
குற்றவாளிகளைக் குறித்து- 'உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?(என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: 'தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.74:42>43


No comments:

Post a Comment